நேற்று காலையில் தான், வாட்ஸ்ஆப் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, புதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலையில், பிப் மோட் எனும் அதன் புதியதொரு அம்சத்தையும் அறிவித்துள்ளது.
unknown nodeபிப் மோட் எனும் புதிய மேம்படுத்தல் ஆனது, தற்போது வரையிலாக ஐபோன் பயனர்களுக்கு உருட்டப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தையும் எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.
unknown nodeபிப் என்பது பிக்சர்-இன்-பிக்சர்(Picture-in-Picture)என்பதின் சுருக்கமாகும். சில மாதங்களுக்கு முன் பரிசோதனை தளத்தில் காணப்பட்ட இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, இறுதியாக ஐஓஎஸ் தளத்தின் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் உருட்டப்பட்டுள்ளது.
அதாவது, வாட்ஸ்ஆப் சாட் வழியாக, பகிரப்படும் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இணைப்புகளை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே பிளே செய்யலாம் அல்லது திறக்கலாம் அல்லது அணுகலாம். அதுமட்டுமின்றி பிளே ஆகி கொண்டிருக்கும் வீடியோவை பார்த்துக்கொண்டே (க்ளோஸ் செய்யாமலேயே) மற்றொரு வாட்ஸ்ஆப் சாட்டிற்கு செல்வது மட்டுமின்றி, வழக்கம் போல மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
unknown nodeவாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் பதிப்பின் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் பிப் மோட் ஆனது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடு சார்ந்த தகவலை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும். இதற்கிடையில் வருகிற மே 25 ஆம் தேதி அன்று, வாட்ஸ்ஆப்பில் சில பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் (General Data Protection Regulation – GDPR) நிகழவுள்ளன.
unknown node