காவலர் ஜெகதீசன் துரை வழக்கில், அமிதாப்பச்சன் என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

நெல்லை மாவட்டத்தில் காவலர் ஜெகதீசன் துரை, மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அமிதாப்பச்சன் என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் காவலர் ஜெகதீசன் துரை, மணல் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அமிதாப்பச்சன் என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். விஜயநாராயணம் காவல் நிலைய எஸ்.பி.சி.ஐ.டி. காவலரான ஜெகதீசன் துரை, கடந்த வாரம் நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றார்.

அப்போது, மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல், அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது. இதுகுறித்து, மணிகண்டன், முருகப்பெருமாள் என்ற இருவர் கைதான நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, தாமரைக்குளத்தைச் சேர்ந்த 27 வயதான அமிதாப் பச்சன் என்பவர், நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்தாஸ் முன்னிலையில் இன்று சரணடைந்தார். அவரை, வரும் 14 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்