உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்ற திரைப் பிரபலங்கள் போல சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இல்லை.
unknown nodeஏனென்றால் இவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் என எந்த சமூக வலைத்தளத்தில் கணக்கு இல்லை. ஐஸ்வர்யா ராய் போல மற்ற பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், கங்கனா ரனாவத், ராணி முகர்ஜி ஆகியோருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை.
unknown nodeகடந்தாண்டு நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் ஏன் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை என கேட்டதற்கு ” சமூக வலைத்தளங்களை தனி நபர்கள் தங்களது பலத்தை காட்ட பயன்படுத்த வேண்டும்.
unknown nodeஅதே நேரத்தில் சமூக வலைத்தளங்களால் நாம் பலவீனமடையக் கூடாது. அதிக நேரம் அதில் செலவழிக்க வேண்டும். ஆனால், நான் சமூக வலைத்தலங்களில் நுழையும் நேரம் வந்துவிட்டது” என்றார் அவர்.
unknown nodeஎனவே கடந்தாண்டு சொன்னது போல முதல் முறையாகமே 11 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் நுழைய இருக்கிறார்.கேன்ஸ் திரைப்பட விழாவுக்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர், தனது கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறவுள்ள சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் மே 12 ஆம் தேதி, 17 ஆவது முறையாக பங்கேற்கிறார் ஐஸ்வர்யா ராய்.