விமானந்தாங்கி போர்க்கப்பல் சீனாவில் முன்னோட்டம் விடப்பட்டது..!

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீன ராணுவத்தை நவீனப்படுத்தும் அந்நாட்டின் முயற்சியில் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோகிங்கில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட பெயரிடப்படாத இந்த போர்க்கப்பல், முதன் முறையாக கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

கப்பல் எந்திரங்களின் உறுதித்தன்மையை பரிசோதிப்பதற்கான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த பின், போர்க்கருவிகள், ஆயுதங்கள் இணைக்கப்பட்டு தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.