அனிதாவுக்காக குரல் கொடுக்கும் 9 வயது அமெரிக்க வாழ் தமிழ் சிறுமி!

மருத்துவராக வேண்டும் என்று கனவு தகர்ந்து போனதால், தன் உயிரை மாய்த்துக் கொண்டார் அனிதா அவரது மறைவால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல, நீட் தேர்வுக்கு

unknown node

மருத்துவராக வேண்டும் என்று கனவு தகர்ந்து போனதால், தன் உயிரை மாய்த்துக் கொண்டார் அனிதா அவரது மறைவால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. அனிதாவுக்கு நீதி கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் நேற்று அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனிதாவுக்காக, 9 வயதே ஆன அமெரிக்க வாழ் தமிழ் சிறுமி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமி, என்று எங்களது வீட்டுக்கு சிறப்பான நாள். எனது அப்பாவின் பிறந்தநாள். ஆனால், நாங்கள் அதை கொண்டாடவில்லை. ஏனென்றால், இந்தியாவில் இருந்து அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவக் கனவு தகர்ந்ததால், அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனிதாவின் தந்தைப் பெயர் சண்முகம். என் தந்தைப் பெயரும் சண்முகம். அதனால், நாங்கள் என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. மருத்துவப்படிப்புக்கு இங்கு (அமெரிக்கா) இருப்பதைப் போலவே, இந்தியாவில் நீட் என்ற நுழைவுத் தேர்வு உள்ளது. ஆனால், அதற்கு நிறைய செலவு செய்து படிக்க வேண்டும்.

அனிதாவின் தந்தை மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளி. மிகவும் ஏழ்மையான குடும்பம். எனவே, அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடினார்கள். நீதிமன்றம் வரை சென்றனர். அங்கு இருக்கும் அரசுகள் எல்லாம், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக உறுதியளித்தன. ஆனால், கடைசி நேரத்தில் தாங்கள் சொன்னதை அந்த அரசுகள் நிறைவேற்றவில்லை. நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர்சேர்க்கை நடந்தது.

ஒரு உயிரை இழந்துள்ள இந்த நேரத்திலாவது, மற்ற மாணவர்களின் நலனைக் காக்க அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும். அனிதாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதை நிறுத்திவிட்டு, எதற்காக அவர் நீதிமன்றம் சென்றாரோ.. அதற்காக நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்’ என்று பேசியுள்ளார்.