யாழ்ப்பாணம் மாணவி வல்லுறவு வழக்கு;7 பேருக்கு மரண தண்டனை..!

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

unknown node

இலங்கையின் புங்குடுதீவில் பள்ளி மாணவி வித்யா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்ததுடன், கொடூரமான முறையில் கொலையும் செய்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 4 பேர் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் உடந்தையாக இருந்தாக குற்றம் சாட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், புதனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மாணவியை கொடூரமாக வல்லுறவுக்கு உள்ளாக்கி, படுகொலை செய்த குற்றவாளி சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். 30 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.