ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை..!

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெர்த் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 குழந்தைகள் 3 பெரியவர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்கள் கிடந்தன.

தகவல் அறிந்து வந்த போலீசார் வீட்டுக்கு வெளியில் கிடந்த 2 உடல்களையும் வீட்டுக்குள் கிடந்த 5 உடல்களையும் மீட்டனர்.

இவர்கள் எவ்வாறு இறந்தனர் அல்லது எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இறந்தவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.