இந்தோனேஷியாவில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். தலைநகர் ஜகார்த்தா அருகே உள்ள தீபோக் என்ற இடத்தில் உயர் பாதுகாப்பு கொண்ட பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இங்கு ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த கொடிய தீவிரவாதிகள் உள்பட ஏராளமானோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியிலிருந்து வரும் உணவுப் பொருட்களை போலீசார் சோதனை செய்வதற்கு கைதிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த சிறைச்சாலையில் போலீசாருக்கும், கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது.
இந்த மோதலில் 6 போலீசாரை கைதிகள் அடித்துக் கொன்றனர். மேலும் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இதையடுத்து சிறைச்சாலையின் உள்ளும், வெளிப்புறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.