கழுத்து கொழுப்பை குறைப்பது எப்படி..,

உடல் நலனில் அக்கறை செலுத்துகிறவர்கள் யாவரும் முதலில் கவனிக்க வேண்டியது சாப்பிடும் உணவுகள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கத்தினை சரி பார்க்க வேண்டும்.

உடல் நலனில் அக்கறை செலுத்துகிறவர்கள் யாவரும் முதலில் கவனிக்க வேண்டியது சாப்பிடும் உணவுகள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கத்தினை சரி பார்க்க வேண்டும். தொப்பை,இடுப்புப் பகுதி, கைகள் என ஒவ்வொரு பாகமாக கவனம் செலுத்தும் நபர்களும் இருக்கிறார்கள்.

அவற்றில் சிலருக்கு உடம்பெல்லாம் நார்மலாக தெரியும். ஆனால் கழுத்துப் பகுதியில் மட்டும் அதிக தசையுடன் காணப்படும். இதனால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமையில் ஆரம்பித்து ஏரளமான சங்கடங்களை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக கழுத்தில் அதிக தசை ஏற்படுவதற்கு என்ன காரணம், அவற்றை போக்க என்ன செய்ய வேண்டும் என்ற சில அவசியமான தகவல்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.

கழுத்து கொழுப்பு :

பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு முக்கியமாக பார்த்தால் சில காரணங்கள் இருக்கிறது.முதலாவது ஒபீசிட்டி. இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடலும் சற்று குண்டாகவே இருக்கும். ஓவர் வெயிட் இருப்பவர்களுக்கு கழுத்துப் பகுதியிலும் கொழுப்பு சேரும். இதைத் தவிர சில மருத்துவ காரணங்கள் சொல்லப்படுகிறது. தைராய்டு பிரச்சனை, மற்றும் சில ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதீத தசை ஏற்படும். இதைத் தவிர மாரடைப்பு தொடர்பான பிரச்சனைகள், அதற்காக நீண்ட நாட்களாக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

தவிர்க்க :

முறையான உணவுப்பழக்கம் மூலமாகவே இந்தப் பிரச்சனையை பாதியளவு உங்களால் குறைக்க முடியும். குளிர்ந்த பொருட்கள், பாக்கெட் உணவுகள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இதைத்தவிர தொடர்ந்து சின்ன சின்ன பயிற்சிகளை செய்ய வேண்டும். இதைவிட முக்கியமான ஒன்று சர்க்கரையை அதிகம் சேர்க்கக்கூடாது. க்ரீன் டீ,பூசணி,எலுமிச்சை,தேங்காயெண்ணையை,சிகப்பு கேப்சிகம்,ஆளி விதை,கேரட்,காற்றாலை,தண்ணீர் போன்றவற்றை சரியான முறையில் நாம் நம் வாழ்கையில் பயன்படுத்தினால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

,