தைராய்டு இந்த நோய் பெரும்பாலான நபர்களுக்கு இருக்க கூடிய ஓன்று. ன்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இதை பற்றி பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி ஆவதே தைராய்டு நோய் ஏற்பட காரணம் ஆகும்.
அறிகுறிகள்: கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டு நோயின் சாதாரண அறிகுறிகள் ஆகும். மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். போன்றவையும் தைராய்டு நோயின் அறிகுறிகளாகும்.
அதற்கானசிகிச்சை :
unknown nodeதைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்வது தைராய்டு நோயிக்கான சிகிச்சை ஆகும்.தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிகவும் அவசியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுகளை உட்கொள்வது நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவைஉணவில் எடுத்துகொள்வது சிறந்தது.
செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே.
unknown nodeசிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.