வங்கி ஊழியருக்கு 5கோடியே 87 லட்ச ரூபாய் அபராதம்..!

பார்க்ளேஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் ஜெஸ் ஸ்டேலிக்கு 5கோடியே 87 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பார்க்ளேஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் ஜெஸ் ஸ்டேலிக்கு 5கோடியே 87 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பார்க்ளேஸ் வங்கியின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்த வங்கியின் ஊழியர் மீது புகார் கூறித் தலைமையகத்துக்கு ஒரு மடல் வந்தது.

அந்த ஊழியர் மீதான குற்றச்சாட்டுக் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அந்தப் புகாரை அளித்தவர் யார் என்பதை அறியத் தலைமைச் செயல் அலுவலரான ஜெஸ் ஸ்டேலி முயன்றுள்ளார்.

இது குறித்து ஒழுங்காற்று வாரியத்துக்குத் தெரியவந்ததை அடுத்து, நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்திய மதிப்பில் 5கோடியே 87லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.