சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவில் திருவிழாவில் பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவரின் தந்தையை அடித்துக் கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியை அடுத்த கோவிலூர் யாமுனிஸ்வரன் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், பெண்களை கேலி செய்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை சுப்பையா என்பவர் தட்டிக் கேட்டதோடு, இளைஞர்களின் குடும்பத்தாரிடம் சொல்லப்போவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சுப்பையாவின் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளார்.
அங்கு அவர் இல்லாத நிலையில், சுப்பையாவின் தந்தை சின்னையாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இளைஞர்கள் சுப்பையாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சின்னையா, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜா ,பாண்டியராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.