43வது கோடை விழா நாளை தொடக்கம்..!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவை, முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கயிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவை, முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கயிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவை தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு வசதிகளை ஆட்சியர் ரோகினி பார்வையிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்காட்டிற்கு செல்ல கோரிமேடு, ஏற்காடு fமலை அடிவாரம் வழியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியே சேலத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன