unknown node
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார். இது ஒரு நாள் அரங்கில் அவர் அடிக்கும் 30 வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் 2வது இடத்தை பகிர்ந்ததோடு சாதனையை சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளது குறிப்பிடத்தக்கது.