2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் தகுதி.

ரஷ்யாவில் அடுத்தாண்டு  அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்

unknown node

ரஷ்யாவில் அடுத்தாண்டு  அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.ரஷியாவில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.வடக்கு அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்டில் வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது.இதன்மூலம் ஐரோப்பா அளவிலான தகுதிச் சுற்றில் சி பிரிவில் ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றிக் கண்டதோடு, உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தது ஜெர்மனி.நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஜெர்மனி, 1934 முதல் தற்போது வரையிலான காலங்களில் வெளிநாட்டில் நடைபெற்ற 47 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.அதேபோன்று, இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.