17 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை..!

சேலம் மாவட்ட கஞ்சநாய்க்கன்பட்டியில் 17 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். பெற்றோரை இழந்த அந்த சிறுமி தாய்வழி தாத்தா பாட்டியுடன் மல்லூரில்

சேலம் மாவட்ட கஞ்சநாய்க்கன்பட்டியில் 17 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். பெற்றோரை இழந்த அந்த சிறுமி தாய்வழி தாத்தா பாட்டியுடன் மல்லூரில் வசித்து வந்தார்.

கஞ்சநாய்க்கன் பட்டி கோவில் திருவிழாவுக்காக தனது தந்தை வழி தாத்தா பாட்டியான குப்புசாமி தீர்த்தம்மாள் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். இவர்களுடன் மனைவியை இழந்தவரான சித்தப்பா வீராசாமியும் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று தாத்தாவும் பாட்டியும் கூலி வேலைக்கு சென்று திரும்பிய போது அந்த சிறுமி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி பலாத்காரம் செய்யும் முயற்சியில் கொல்லப்பட்டாரா என விசாரணை நடத்தப்படுகிறது. சிறுமியின் சித்தப்பாவான வீராசாமியை காணவில்லை என்பதால் அவரையும் தேடி வருகின்றனர்