மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய விரிவுரையாளரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ஜெனிஃபா. அவரை அதே பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த முன்னாள் பகுதி நேர விரிவுரையாளர் ஜோதிமுருகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நடந்த முதல்கட்ட விசாரணையில் அவருக்கு வேலை தரவில்லை என்பதால் இந்த செயலில் அவர் ஈடுப்பட்டுள்ளார் என்று பல்கலைகழகத்தின் சார்பில் விளக்கம் தரப்பட்டது.இந்நிலையில் ஜோதிமுருகன் நேற்று நள்ளிரவு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து ஜோதிமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.
பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய வாலிபர் ஜோதிமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்திய விரிவுரையாளரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
unknown node