வீடியோ: விம்பிள்டன் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா!

The video of Wimbledon tennis player Serena Williams leaving the tournament with tears after she suffered a leg injury in the first round has gone viral.

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து அழுகையுடன் அவர் வெளியேறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஆண்டுதோறும் 4 வகையான அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய டென்னிஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு முன்னணி வீரர் வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்பு அவர் தொடர்ந்து விளையாட முயற்சித்தாலும் வலி அதிகமாகியதால் அவர் வெளியேறியுள்ளார். விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற செரீனா 8 வது முறையாகவும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றிலேயே செரீனா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் கண்ணீருடன் கையசைத்து வெளியேறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node