இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

In Chennai, petrol is still priced at Rs 89.13 per liter and diesel at Rs. It sells for Rs 82.04.

சென்னையில் இன்றும்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.89.13க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 82.04க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது அதற்கு பிறகு ஜூன் முதல் அதிகரித்து வந்தது . இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது அதைபோல் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ. 82.04 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!