இன்றைய முட்டை விலை..!

Today the farm purchase price of an egg in the Namakkal region is unchanged at 4.00. In Chennai, it is selling for 4.20 rupees, up 10 paise.

இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல் மண்டலத்தில் மாற்றமின்றி 4.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 10 காசுகள் உயர்ந்து 4.20 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று ஆம், 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் உற்பத்தி அதிகமானதால் முட்டையின் விலையை உயர்த்த முடிவு செய்தனர்.

அதன் படி, நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை கடந்த 8 ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.00 காசுகளாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 10காசுகள் உயர்ந்து 4.20 காசுக்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.