இன்றைய முட்டை விலை..!

Today the farm purchase price of eggs in Namakkal region is being sold at Rs

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றமின்றி 4.80காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, கூட்டத்தில் மற்ற மண்டலங்களில் முட்டையின் விலை தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும் வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பதன் காரணம் காரணமாக முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த 13ம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 13ம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றமின்றி 4.80காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.