சென்னை சைதாப்பேட்டையில், ஜோன்ஸ் சாலை அருகே சாலையில் சென்ற பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது காரில் ஏற்றி, அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த இடத்தில் சுற்றி நின்றவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் ஏற்றி விட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் காரில் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
