சிறையில் இருந்து வெளிவந்த பாஜக மாவட்ட தலைவருக்கு பசு மாட்டுடன் திரண்டு வந்து வரவேற்பு..!
சிறையில் இருந்து வெளி வந்த நெல்லை மாவட்ட பாஜக தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு
அரசு கட்டுப்பாட்டில் இருந்த மாடுகளை அத்துமீறி அவிழ்த்துவிட்ட புகாரில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் சிறை சென்றார். இந்த நிலையில், இன்று அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து வெளி வந்த நெல்லை மாவட்ட பாஜக தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சிறை முன்பு திரண்ட பாஜகவினர் பசு மாட்டுடன் வந்து செண்டை மேளம், கரகாட்டம் என உற்சாகத்துடன் வரவேற்றனர்.