தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை.!

In Chennai, petrol is still unchanged at Rs 88.82 per liter and diesel at Rs 81.71 per liter.

சென்னையில் இன்றும் எந்த மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஊரடங்கால் மே வரை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது ஜூன் முதல் அதிகரித்து வந்தது .இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர் .

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்றும் அந்த விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.82 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.