ஹங்கேரியில் நடைபெற்ற உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியினர் 13 பதக்கங்களை வென்றுள்ளதால்,அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில்,கடந்த 19 ஆம் தேதி முதல் நேற்று வரை உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து,நேற்று நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின்,73 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பிரியா மாலிக் ,பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று,மல்யுத்தத்தில் தனது பலத்தை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் நாட்டை பெருமைப்படுத்தினார்.முன்னதாக,புனேவில் நடந்த கெலோ இந்தியாவின் 2019 ஆம் ஆண்டு போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற இவர், பின்னர் டெல்லியில் நடைபெற்ற 17 வது பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeமேலும்,மல்யுத்த ஃப்ரீஸ்டைல் பிரிவில் தானு, கோமல், அமன் குலியா, சாகர் ஜக்லான் ஆகியோரும் தங்கம் வென்றனர். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் ஜஸ்கரன் சிங் மற்றும் இந்திய மகளிர் மல்யுத்த அணி வெள்ளி வென்றது.மேலும்,அங்கித் குலியா, வர்ஷா, சாஹில் ஆகியோர் வெண்கலத்தை வென்றனர்.இதனால் 5 தங்கம் உட்பட மொத்தம் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
unknown nodeபிரதமர் வாழ்த்து:
இதனையடுத்து,உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :”எங்கள் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து எங்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை இந்தியா வென்றது. எங்கள் அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்”,என்று பதிவிட்டிருந்தார்.
unknown node