தங்கம் விலை அதிரடி உயர்வு.! இன்றைய விலை நிலவரம் இதோ.!

In Chennai, the price of jewelery gold rose by Rs 272 to Rs 35,872 per razor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,900க்கும் விற்பனையாகிறது.