தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவு..!

In Chennai today, the price of 22 carat jewelery gold fell by Rs 336 to Rs 35,528 per razor.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.35,528 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நிலையில், இன்று விலை குறைந்துள்ளது அதன் படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.35,528 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.42 குறைந்து ரூ.4,441க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.