3 நாட்களில் 30 காசுகள் உயர்ந்தது முட்டை விலை..!

In Namakkal region, the price of eggs rose by 10 rupees to 4.00 rupees on the 8th. Following that, the price of eggs rose by 20 paise to 4.20 paise today.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 8 ஆம் தேதி முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 4.00 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து 4.20 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மண்டலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் முட்டை உற்பத்தி 10% குறைந்ததால் முட்டை விலை இன்று அதிகரித்துள்ளது.

அதன் படி, நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து 4.20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4.30 காசுக்கு விற்பனை. மேலும் கடந்த 8 ஆம் தேதி முட்டை விலை 10 காசுகள் உயர்ந்ததாலும் இன்று 20 காசுகள் உயர்ந்ததாலும் 3 நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.