தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் இதுகுறித்து, ‘கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node