தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் சுகுமாரன் நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையின் கட் ஆப் மதிப்பெண்ணில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முறைகேடாக மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் எஸ் பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகளின் விசாரணையில், முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே தட்டச்சர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணியிடநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, 38 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் சுகுமாரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
