155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்க தொடங்கிய 'யாஸ்' புயல்...!

155 km Yaas storm that started to cross the coast with hurricane-force winds

155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் ‘யாஸ்’ புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,கடலோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒடிசா,மேற்கு வங்க மாநிலங்களின் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ராணுவம், விமானப்படை,கடற்படை மற்றும் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.