ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் வாக்கெடுப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் அம்சம் தான் ட்விட்டர் வாக்கெடுப்பு. இதன் மூலம் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு அல்லது மூன்று பதில் வைத்து பதிவு செய்வார். பயனர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான பதிலுக்கு வாக்களிக்கலாம்.
அந்த வகையில் தற்பொழுது அனைவரும் வைக்க முடியும் என்ற நிலை மாறி உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், “வரும் ஏப்ரல் 15 முதல் உறுதிப்படுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் இதனால் செயற்கை நுண்ணறிவு பாட்டுகளை எளிதில் கண்டுபிடித்து கட்டுப்படுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
unknown node