சீனாவில் மேம்பாலத்தில் புதிய சாதனை..!
கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை அப்படியே திருப்பி மற்றொரு பக்கத்துடன் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது சீனாவில். அந்நாட்டின் பீஜிங் நகரையும், சின்ஜங் நகரையும் இணைக்கும் 2450 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலையில் ஹீபாய் பிராந்தியத்தில் நான்யாங்கி நகருக்கு அருகே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
அதில் 100 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட ஒரு பகுதியை மற்றொரு திசையில் திருப்பி அமைக்க திட்டமிட்ட பொறியாளர்கள் அதனை கச்சிதமாக செயல்படுத்தினர். இரண்டு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் டன் எடை கொண்ட பாலத்தின் ஒரு பகுதியை சேதமின்றி திருப்பி வைத்த காட்சிகளும் இப்போது வெளியாகி உள்ளன.