ஜியோ பயனர்களே! சிறந்த ஹாட்ஸ்டார் பிளான் தேடிட்டு இருக்கீங்களா?

Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது.

jio hotstar planjio hotstar plan

Jio Hotstar Plan: ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது.

ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ் செய்யும் போது அதனுடன் சேர்ந்து கிடைக்கும் ஹாட்ஸ்டார் சாந்தாவின் உரிமைக்காக தங்களுக்கு விருப்பமான திட்டங்களை தேர்வு செய்து ரீஜார்ச்  செய்து ஹாட்ஸ்டாரை கண்டு கழித்து வருகிறார்கள். ஒரு சிலர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யாமல் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ்  செய்வார்கள்.

ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் ரூ.2999க்கு வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக பணம் செலவு செய்து ரூ.3178 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் நமக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி உரிமை கிடைக்கிறது. ரூ.2999 திட்டத்தில் 365 நாள் வேலிடிட்டி உடன்  ஒரு நாளைக்கு 2.5  ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதில், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட், ஆகிய ஓடிடி தளங்களின் இலவச உரிமையும் கிடைக்கிறது.

ஆனால், அந்த ரீசார்ஜ்  திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக இன்னும் ரூ.179  அதிகமாக செலவு செய்து ரூ.3178 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் நமக்கு 12 மாதங்களுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயன்படுத்திக்கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. மேலும், இந்த ரூ.3178 திட்டத்தில் தினமும் எத்தனை ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பதனை பற்றியும் விவரமாக பார்க்கலாம்.

ரூ.3178 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிப் டேட்டா கிடைக்கிறது. 5 பயன்படுத்துபவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. அன்லிமிடெட்  வாய்ஸ்கால் இருக்கிறது. அதைப்போல, 1 வருட ‘டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலில் பயன்படுத்தி கொள்ளும் வசதியும் வருகிறது. கண்டிப்பாக போனில் ஹாட்ஸ்டார் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் உதவியானதாக இருக்கும்.  இந்த ரீசார்ஜ் திட்டம் மை ஜியோ (MYJIO) செயலியில் இல்லை என்றால் கூட கவலை வேண்டாம். உங்களுடைய வாட்ஸ்அப் சென்று MyJio Offers மூலம் கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.