Great Indian Festival: மேக்புக் ஏர் எம்1 வெறும் ரூ. 52,999 மட்டுமே.! தள்ளுபடியில் மிரட்டும் அமேசான் ஃபெஸ்டிவல்.!

MacBook Air M1

இகாமர்ஸ் நிறுவனமான ஆப்பில் தனது மிகப்பெரிய ஷாப்பிங் நீங்கள் தானே கிரேட் இந்தியன் பெஸ்டிவல் அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நாளில் ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருள்கள் என பல தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

இதில் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு சலுகையாக ஒரு நாள் முன்னதாகவே கிரேட் இந்தியன் பெஸ்டிவல் வழங்கப்படும் பொருட்களுக்கான தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெற முடியும். அந்தவகையில் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் லேப்டாப் போன்றவற்றின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மேக்புக் ஏர் எம் 1  வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள், அமேசான் ஃபெஸ்டிவல் தொடங்கும் வரை காத்திருங்கள்.

ஏனென்றால் அதன்விலை கிட்டத்தட்ட ரூ.35 ஆயிரம் வரை குறைக்கப்பட உள்ளது. அதன்படி தற்போது மேக்புக் ஏர் எம் 1 ஆனது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.99,990 ஆக விற்பனையாகி வருகிறது. இதே மேக்புக் அமேசானில் 30 சதவீத தள்ளுபடி உடன் ரூ.30,000 விலை குறைக்கப்பட்டு ரூ.69,990 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விலைகளை தாண்டி அமேசான் ஃபெஸ்டிவல் நேரத்தின்போது இதன் விலை, 52,999 ஆக இருக்கும்.

எப்படியென்றால், ரூ.99,990 ஆக இருக்கக்கூடிய மேக்புக் அமேசான் ஃபெஸ்டிவலில் ரூ.62,990 என்ற தள்ளுபடி விலைக்கு விற்பனையாகும். இந்த புதிய விலை அக்டோபர் 7 முதல் பிரைம் பயனர்களுக்கு வரும். இதனை வாங்க விரும்புபவர்கள் ரூ.3,750 வரை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.6,241 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற முடியும். இந்த அனைத்து சலுகையுடன் நீங்கள் வாங்கும் போது, இதன் விலை ரூ.52,999 ஆக மட்டுமே இருக்கும்.

இந்த மேக்புக் ஏர் எம் 1 ஆனது 2,560 x 1,600 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 400 நிட்ஸ் பிரைட்னெஸ் கொண்ட 13.3-இன்ச் அளவுள்ள எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எம்1 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த மேக்புகில் 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி உள்ளது. 30 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் 18 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்