அட்ராசக்க...பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

motorolaedge40

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக புகழ் பெட்ரா ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் ஆனது, அவ்வபோது அசத்தலான அம்சங்களை கொண்ட, ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் “Motorola Edge 40″எனும் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

Motorola Edge 40:

Motorola Edge 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் பிஓஎல்இடி (P-OLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே  1080 x 2400 பிக்சல்களின் முழு எச்டி ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. அதோடு, 1200 நிட்ஸ் பிரைட்னெஸ்ஸையும் கொண்டுள்ளது.

unknown node

144Hz ரெபிரெசிங் ரேட்டுடன் வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்ட அதன் பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். மேலும், இதில் 8 கோர்களை உடைய மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020) பிராசஸர் உள்ளது. இதன் முன் பக்க கேமரா 32 எம்பியுடனும், பின்பக்கம் 50 எம்பி + 13எம்பி என இரண்டு கேமரா உள்ளது

பேட்டரி வசதி எப்படி..?

இந்தMotorola Edge 40ஸ்மார்ட்போன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, இதன்மூலம் வேகமாக போனை ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேமுடன் வரும் இந்த மொபைல் 256 ஜிபி சேமிப்பகத்தைக் (Internal Memory) கொண்டுள்ளது.

எப்போது வருகிறது..?

நிறுவனம் தனது முதல் மோட்டோரோலா எட்ஜ் 40 சீரிஸ் ஸ்மார்ட்போனை மே 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் விலை ரூ.40,000-க்கும் அதிமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையை போலவே இந்த போனும் தரமாக தான் இருக்கும். ஏனென்றால், அதற்கு கொடுத்துள்ள அம்சங்கள் அப்படி. எனவே, Motorola போன் உபயோகம் செய்வர்களுக்கு இந்த Motorola Edge 40 போன் கண்டிப்பாக பிடிக்கும்.

unknown node