ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்..! கூகுள் பிலேஸ்டோரில் இருந்து 12 செயலிகள் நீக்கம்..!

கூகுள் பிலேஸ்டோரில் இருந்து 12 ஆபத்தான செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிலேஸ்டோரில் இருந்து 12 ஆபத்தான செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

மால்வேர் போன்ற ஆபத்தான மென்பொருள் பல வழிகளில் பயனர்களின் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் பயனர்களின் தகவல்களை திருடுபோவதோடு மட்டுமல்லாமல் அவர்களது சாதனங்களிலும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கடந்த சில வருடங்களில் இந்திய அரசாங்கம் பல்வேறு பயனற்ற மற்றும் ஆபத்தான செயலிகளில் சிலவற்றை கூகுள் பிலேஸ்டோரில் இருந்து நீக்கியது.

unknown node

இதனையடுத்து தற்பொழுது கூகுள் பிலேஸ்டோரில் இருந்து 12 ஆபத்தான செயலிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. Golden Hunt, Reflector, Seven Golden Wolf blackjack, Unlimited Score, Big Decisions, Jewel Sea, Lux Fruits Game, Lucky Clover, King Blitz, Lucky Step மற்றும் WalkingJoy ஆகியவை நீக்கப்பட்ட செயலிகள் ஆகும்.

unknown node

இணையத்தில் பரவும் மோசமான இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்களை ஏமாற்றுவது அல்லது அவர்களை ஏமாற்றும் இணையதளத்திற்கு வழிநடத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் வேறு சில பயன்பாடுகள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் சில முதலீடு செய்யும் மென்பொருள் மற்றும் கேள்வித்தாள் உள்ளீடு செய்யும் மென்பொருளாகவும் மற்றவை எளிமையான மற்றும் அடிமையாக்கும் விளையாட்டுகளாகத் தோன்றியது. இது போன்ற ஆபத்தான பயன்பாடுகள் உங்களது சாதனத்தில் இருந்தால் அவற்றை இப்போதே நீக்குவது மிகவும் நல்லது.