மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணியின் சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். முதலில் பாஜகவின் இடைக்கால சபாநாயகரை நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் […]
மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.