வங்கதேச தேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 288 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் […]