கடந்த 2015 ஜனவரி 23-ல் சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் பதவியேற்றார். பட்டத்து இளவரசராக முகமது பின் நய்யீப் பொறுப்பு வகித்தார். போதை மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மன்னர் சல்மானின் இன்னொரு மகன் முகமது பின் சல்மான் கடந்த 2017 ஜூனில் பட்டத்து இளவரசராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சவுதி அரேபிய ராணுவ தலைமை தளபதி ஜெனரலாக இருந்த அப்துல் ரஹ்மான் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். […]