Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கூடுதலாக 12 காவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் இருவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்து, யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனையடுத்து, சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போதுள்ள நிலையே தொடரும் என முதலவர் ரங்கசாமிக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிருந்த நிலையில், பிரதமர் மோடியிடம் வாதிட தயார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் இன்று காணொலி வாயிலாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி […]