தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் முதல் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடலை திருநெல்வேலி ராம் தியேட்டரில் செக்கசிவந்த வானம் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது. DINASUVADU