தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், இந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு […]