டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட இந்தியா வீரர் கிருஷ்ணா நாகர் 2-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்முலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் […]
டோக்கியோ பாராலிம்பிக் பேட் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு தகுதி. இந்திய பாரா-பேட்மிண்டன் நட்சத்திர வீரருமான கிருஷ்ணா நாகர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் SH6 பிரிவில் B குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். குரூப் சுற்றில் பிரேசில் வீரர் விட்டோரை 21-17, 21-14 என்ற நேர் செட் புள்ளிகளில் வீழ்த்தி, இந்திய வீரர் அரையிறுதிக்கு […]
டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பேட்மிட்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், வீராங்கனை பாலக் கோலி வெற்றிபெற்றனர். மலேசிய வீரர் டிதின் தரேசோவை இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் எதிர்கொண்டார். இப்போட்டியில் 22-20,21-10 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றி பெற்றார். மற்றோரு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாலக் கோலி துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பாலக் கோலி வெற்றி பெற்றார்.