தளபதி விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் , தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதாக கூறப்பட்டது. கமலின் 60 ஆண்டு கலை விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெற்றது. ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடைபெற உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு பிரமாண்ட … Read more

1,00,00,000 ரூபாய் நிதியை தமிழக திறன் மேம்பாட்டிற்காக அளித்த உலகநாயகன்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார். அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் … Read more

உலகநாயகன் விசிறிகளாகவே மாறிப்போன ஜெயம் ரவி & கார்த்தி! என்ன செய்தார்கள் தெரியுமா?!

உலக நாயகன் கமல்ஹாசன் இம்மாதம் 7ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கமலின் 60ஆண்டுகால திரையுலக பயணத்தை பாராட்டும் வகையில் சென்னையில் பிரமாண்ட கலை விழா நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி என பலர் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் வரும் தீம் பாடலுக்கு நடனம் ஆடி தனது … Read more

இந்தியன்-2வில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்! – வருத்தப்பட்ட விஜய் சேதுபதி!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், காஜல், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிஷங்கர், என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உலகநாயகன் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் பேசிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மக்கள் நீதி மையம் கட்சி பெயர் எனக்கு பிடித்துள்ளது. … Read more

'இருவரின் சித்தாந்தங்கள் மாறினாலும் நட்பு மாறாது' – ரஜினி நட்பு குறித்து கமலஹாசன் உருக்கம்!

உலகநாயகன் கமல்ஹானுக்கு அண்மையில் 65வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளாகி விட்டது. இதனை பாராட்டும் விதமாக நேற்று சென்னையில் நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதில் பேசிய கமல்ஹாசன்,ரஜினியுடனான நட்பு குறித்து பேசி மகிழ்ந்தார். ‘ எங்கள் இருவரது சித்தாந்தமும் வேறு. அதனால் ரசிகர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள கூடாது. சித்தாந்தம் வேறு வேறாக இருந்தாலும் எங்களது நட்பு மாறாது. இந்தியன்2 திரைப்படம் … Read more

தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் : ரஜினியின் அனல் பறந்த அரசியல் அதிரடி கருத்து!

கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகாலம் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து தனது பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதில், ‘ கமல்ஹாசன் எனது கலையுலக அண்ணா. நான் நடத்துனராக இருந்து நடிகனாக கஷ்டத்தை விட கமல் அதிகம் கஷ்டப்பட்டார். திரையுலகில், உதவி இயக்குனர், … Read more

உலகநாயகன் கமல் 60! 'உங்களில் நான்' பாராட்டு விழாவில் நிறைந்த நட்சத்திர பட்டாள புகைப்பட தொகுப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 8ஆம் தேதி கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்ச்சி நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கமல் 60 உங்களில் நான் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். இதில் உலகநாயகன் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபுவு, … Read more

உலகநாயகனின் பாராட்டு விழாவில் தல – தளபதி கலந்துகொள்ளவில்லையாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 8ஆம் தேதி கமல்ஹாசனின் தயாரிப்பு அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரையுலக பயணத்தை பெருமைப்படுத்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் கலந்துகொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் … Read more