Tag: Jeyaraj and Bennix

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை…! முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம்.பி கனிமொழி அஞ்சலி…!

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ், முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், எம்.பி.கனிமொழி அவர்கள் அஞ்சலி. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவர் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரையும் காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட காவத்துறையினர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில், […]

Jeyaraj and Bennix 3 Min Read
Default Image

சாத்தான்குளம் வழக்கு விசாரணை! டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட  9 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாத்தான் குளம்  தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை டிச.21ம் தேதிக்கு மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  சாத்தான் குளத்தில் ஜெயராஜ் – பெனிக்ஸ் இருவரும் சிறையில், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு, உயிரிழந்தனர்.  இவர்களது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 10 காவல்துறையினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிலாந்தர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத சிறையில் சிறப்பு வகுப்பு […]

#Madurai Court 3 Min Read
Default Image

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம்! நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைதொடக்கம் ! சிபிஐ தகவல்!

சாத்தான் குளம் தந்தை-மகன் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை  தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலர்கள்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நவம்பர் 11-ஆம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. […]

#CBI 6 Min Read
Default Image

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த சிபிஐ விசாரணை அறிக்கை.!

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தங்களது விசாரணை அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், […]

CBI investigation 5 Min Read
Default Image

தந்தை மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது, […]

Bail plae 3 Min Read
Default Image

தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிக்கு கொரோனா!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், காவலர்கள் மூன்று பேரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளநிலையில், டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் […]

CBI officer 4 Min Read
Default Image

தந்தை-மகன் கொலை வழக்கு: சிறைக்காவலர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறைக்காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா, மாரிமுத்து ஆகியோரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை. கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து தந்தை-மகன் உயிரிழந்த […]

Human Rights Commission 3 Min Read
Default Image