ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வரியை ஒப்பிடுகையில், ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வரி குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தற்போதுள்ள நிதியமைச்சர் கூறுகையில், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது என்றும் இந்திய வரிவிதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் ஜிஎஸ்டி, வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி.க்கு முந்தைய […]