கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று காலை தெற்கு கிரேக்க தீவான கிரீட் தீவில் 5.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 9:17 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் தென்கிழக்கில் 246 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள் […]
கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் காயங்கள் மற்றும் சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கிரேக்க தீவான ரோட்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 4.6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நிலநடுக்கத்திலும் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.