அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற 2021-22-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் […]