உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் வேண்டுகோள். 2022-ம் ஆண்டுக்கான NIRF (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் http://nirfindia.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று முதல் 8-ம் தேதி வரை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது நாளைக்குள் கருத்து கேட்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி […]